Monday, April 30, 2018

ஹசனலிக்கு கிழக்கு முதலமைச்சு பதவியும் கட்சியின் முக்கிய பதவியும் வழங்க தயார்!

SHARE

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.ரி ஹசனலிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சு பதவியை வழங்க தாம் தயாராக இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் தவிசாளருமான முழக்கம் மஜீத் குறிப்பிட்டுள்ளார், இது குறித்து அவரின் முகப்புத்தகத்தில் பதிவு செய்த பதிவு.

ஸ்ரீஹசன் அலியும் நானும் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக 32 வருடங்கள் தொடர்ச்சியாக உழைத்து வந்திருக்கின்றோம். பெருந்தலைவர் அஷ்ரப்பின் மறைவை தொடர்ந்து இன்றைய தலைமைத்துவம் சந்தித்த அத்தனை சவால்களையும், நெருக்கடிகளையும் இருவரும் தோளோடு தோள் நின்று முறியடுத்துள்ளோம். ஹசன் அலியின் அர்ப்பணிப்புக்களை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. 2016 பெப்ரவரி மாதம் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உச்சபீட கூட்டத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக சகோதரர் ஹசன் அலி அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறினார். தனிப்பட்ட ரீதியில் அவருடன் எந்தவிதமான மனக்கசப்புகளும் கட்சியின் உயர்மட்டத்திலுள்ளவர்களுக்கு கிடையவே கிடையாது.
ஹசன் அலி அவர்கள் பெருந்தலைவர் அஷ்ரப் முன்வைத்த அரசியற் கோட்பாடுகளை வென்றெடுக்க வேண்டுமென்பதில் இன்றும் முனைப்பாக செயற்பட்டு வருபவர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சீர்குலைந்த கிடைக்கும் தமிழ்-முஸ்லிம் உறவை கட்டியெழுப்பி இரண்டு சமூகங்களும் சமத்துவமாக வாழக்கூடிய தன்னாட்சி கட்டமைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் திடமாக இருந்து வருகின்றவர். முஸ்லிம் காங்கிரசை பொறுத்தமட்டில் முதலமைச்சர் பதவியை வகிப்பதற்கு முற்றிலும் தகுதியானவர் ஹசன் அலியே. தனிப்பட்ட ரீதியிலும், கட்சியின் தவிசாளர் என்ற வகையிலும் மூன்று தசாப்தங்கள் அவருடன் இணைந்து கட்சியினை கொண்டு சென்றவன் என்ற உரிமையுடன் ஹசன் அலி அவர்களை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு திரும்புமாறு அழைக்கின்றேன். அவர் தாய்வீடு திரும்ப முன்வரும் பட்சத்தில் கட்சியின் இரண்டாம் நிலை பதவியான தவிசாளர் பதவியை திறந்து அதனை அவருக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளேன்.
SHARE

Author: verified_user