Friday, April 6, 2018

வெற்றி பெற்ற மு.கா ஓட்டமாவடி பிரதேச ஆட்சியை மக்கள் காங்கிரசிடம் கையளித்தது

SHARE

புதிய குரல் ஓட்டமாவடி சுபியான்

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக லெப்பை தம்பி அஸ்மி தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

ஒட்டாமாவடி 2ம் வட்டாரத்தில் இருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்ட LT.அஸ்மி அவர்கள் இன்று சபையில் 2 வாக்குகள் மேலதிகமாக பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

அதேவேளை, பிரதித் தவிசாளராக ஒட்டாமாவடி 3ம் வட்டாரத்தின் வேட்பாளரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டியல் உறுப்பினருமான UL. அஹமட் லெப்பை அவர்கள் வாக்கெடுப்பின் போது 10 வாகுகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

முஸ்லிம் காங்கிரசின் தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரவ உள்ளூராட்சி   உறுப்பினர்களுக் கிடையிலான முரண்பாடுகள் இச்சபையை மு.கா இழப்பதற்கான காரணம் என மக்களால் சிலாகிக்கப் படுகின்றது. 

SHARE

Author: verified_user