Friday, April 6, 2018

த.தே.கூ 10 நிப‌ந்த‌னைக‌ளை எழுத்து மூல‌ம் ச‌ம‌ர்ப்பித்து கையொப்ப‌த்தை பெற்ற‌து பொய்

SHARE

நமது செய்தியாளர் மு.அ மஜீத்

ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வை ஆத‌ரிப்ப‌த‌ற்காக‌ த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பு 10 நிப‌ந்த‌னைக‌ளை எழுத்து மூல‌ம் ச‌ம‌ர்ப்பித்து ர‌ணிலின் கையொப்ப‌த்தையும் பெற்ற‌து என்ப‌து பொய் என‌ அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌ன் ம‌றுத்துள்ளார். 

மேற்ப‌டி ஒப்ப‌ந்த‌ம் ந‌ட‌ந்த‌தாக‌ த‌மிழ் கூட்ட‌மைப்பு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் அடைக்க‌ல‌நாத‌ன் கூறிய‌தாக‌ ஆங்கில‌ ப‌த்திரிகையும் செய்தி வெளியிட்டிருந்த‌து.

அமைச்ச‌ர் ம‌னோ க‌ணேச‌ன் இத‌னை ம‌றுத்திருப்ப‌த‌ன் மூல‌ம் ஒன்றில் த‌மிழ் கூட்ட‌மைப்பு த‌ம் ம‌க்க‌ளை ஏமாற்ற‌ பொய் சொல்லியிருக்க‌ வேண்டும். அல்ல‌து ஐ தே க‌வை காப்பாற்ற‌ ம‌னோ க‌ணேச‌ன் பொய் சொல்லியிருக்க‌ வேண்டும். எது உண்மை என்ப‌தை இரு த‌ர‌ப்பாரும் தெளிவாக்க‌ வேண்டும்.

அத்துட‌ன் இவ் ஒப்ப‌ந்த‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ ர‌ணில் வாய் திற‌க்காம‌ல் இருக்கும் போது ஐ தே க‌ அல்லாத‌ ம‌னோ க‌ணேச‌னுக்கு என்ன‌ அக்க‌றை என்ற‌ கேள்வியும் உள்ள‌து. 

அதே வேளை ம‌னோ க‌ணேச‌ன் சொல்வ‌து உண்மையாயின் த‌மிழ் கூட்ட‌மைப்பும் முஸ்லிம் காம்க்கிர‌ஸ் போன்று ம‌க்க‌ளை "பேக்" காட்டுகின்ற‌தா என்ற‌ கேள்விக்கு அக்க‌ட்சி ப‌தில் த‌ர‌ வேண்டும்.
SHARE

Author: verified_user