Wednesday, February 14, 2018

மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுத்த மக்கள்: பசில் ராஜபக்சவின் பகிீர் பதில்

SHARE


ராஜபக்சவினருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என நாட்டு மக்களின் நிலைப்பாட்டின் மூலம் மிகவும் தெளிவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட ராஜபக்சவினருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, சேறுபூசி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்த அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சுமார் 50 லட்சம் மக்கள் அரசாங்கத்திற்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எப்படியான அரசியல் பழிவாங்கல்களை செய்தாலும் நாட்டு மக்களுக்காக ராஜபக்சவினர் மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
SHARE

Author: verified_user