Friday, February 2, 2018

அரசியல் கைதிகள் வழக்கு மீண்டும் வவுனியாவிற்கு!

SHARE


உண்ணாவிரத்தில் ஈடுபட்ட மூன்று அரசியல் கைதிகளின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.அவர்கள் மூவரதும் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

அவர்களிற்கு ஆதரவாக வடக்கில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.வடக்கு ஒருநாள் முடங்கி அவர்களது போராட்டத்திற்கு ஆதரவும் வழங்கியிருந்தது.

அவர்களின் வழக்குகளை சட்டமாஅதிபர் திணைக்களம் திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனு அரசியல் கைதிகள் சார்பில் கடந்த செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார்.
அதன் மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் வழக்கினை மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது
SHARE

Author: verified_user

0 comments: