Thursday, February 8, 2018

வழி மொழியும் சாஸ்திரங்களும்... விழி பிதுங்கும் மக்கள் நலனும்...

SHARE

இந்தியாவை ஆளும் மோடி அரசின் பதவிக் காலம் முடுவடைய இன்னமும்15மாதங்கள் இருகின்ற நிலையில்  இந்திய நாடாளுமன்றத்தை கலைத்து அதனுடன் சேர்த்தே அணைத்து மாநில  சட்ட சபைகளுக்குமான   தேர்தலை முன்கூட்டியே நடத்தலாமா....? என அதி கவனத்துடனான வழிமுறைகளை வகுத்திடத் தொடங்கி உள்ளார் நரேந்திர மோடி.என கசிந்துள்ள ஒரு தகவல் இந்திய அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிஸ்ட காற்றால் அரியணை ஏறியுள்ள பழனிச்சாமி, பன்னீர்செல்வம் கூட்டை கலங்க வைத்துள்ளது.

்மையில் இந்தியாவின் மத்திய உளவுத் துறை மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் தயாரித்து வழங்கபட்ட  இரண்டு வினைப்பயன் அறிக்கைகள் Performance Reports இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அதிர வைத்திருக்கின்றன. இதன் வெளிப்பாடே முன்கூட்டியே நாடாlள மன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டம் போடப் படுகிறதாம்.
கடந்த 2014 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீச வைக்கபட்ட மோடி அலையால் இந்திய அரசியல் கட்சித் தலைவர்களே எதிர்பாராத அளவுக்கு 282 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, அதனுடன் கூட்டாக களமிறங்கிய கட்சிகளின் ஆதரவு இல்லாமலே தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி பெருவெற்றி ஈட்டியது .
இந்த நிலையில் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் ஆயுள்காலம் 2019 ஏப்ரல் வரை இருக்கிறது. ஆனால், அதுவரை காத்திருக்காமல் இந்த ஆண்டிலேயே தேர்தலை நடத்திட மோடி திட்டமிடுவதாகத் தகவல்கள் கசிகின்றன.
கடந்த ஆண்டு (2017) தொடக்கத்திலிருந்து நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மோடி அரசின் மீதான  கருத்தொற்றுமை (Consensus) குறித்து அனைத்து மாநிலங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விரிவான ஓர் அறிக்கையைக் கொடுத்து வருகிறது மத்திய உளவுத்துறை. கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளில் மோடி அரசின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி விவகாரங்கள் தெற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய மனக்குறைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜம்மு-கஷ்மிர், இமாச்சல பிரதேசம் தவிர்த்த வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் மட்டுமே ஆதரவு இருப்பதாகவும் அதுக்கும் மங்கும் வாய்ப்பே அதிகம் எனவும்  குறிப்பிட்டிருந்தது. ஆனால், 2017 நவம்பரில் கொடுக்கப்பட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும் பாஜக  சரிவைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது உளவுத்துறை.
டிசம்பரில் ஒன்று திரட்டி 2018 ஜனவரி முதல் வாரத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையில், ”நாடாளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால், 210 இடங்களே கிடைக்கும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாஜக  எம்.பிக்கள் பெரும்பாலும் தங்கள் தொகுதி மக்களிடையே மனக்குறைகளைத்தான் சம்பாதித்து வைத்துள்ளனர். இந்தச் சரிவு பாஜக வுக்கு மட்டுமல்ல,அதன்  கூட்டணிக் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சந்திக்கும் சரிவு, வலிமையான மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரசுக்கு நன்மை தருவதாக மாறுகிறது. இதேநிலை இன்னும் ஓர் ஆண்டுக்கு நீடித்தால், 2019 இல் பாஜகவுக்கான சரிவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு எனச் சொல்லப்பட்டுள்ளது.

உளவுத்துறையின் அறிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்த நரேந்திர மோடி, அதனை பாஜகவின் கொள்கை வகுப்பாளர்களிடம் கொடுத்து ஆராய வலியுறுத்தி இருப்பதுடன் ஆன்மிகத்திலும் சோதிடத்திலும் அதீத நம்பிக்கை கொண்ட அவர் தமது சாதகத்தை எதிர்காலப் பலனைக் கூறும் சோதிடர்களிடம் கொடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கணிக்கச் சொல்லி  இருக்கிறார்.

சோதிடத்தை ஆராய்ந்தவர்களோ, ”உங்களுக்கு வீணடிப்பு ஏற்படுத்தக் கூடியதாக காலம் இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு அரசியல் ரீதியாகவும் ஆட்சிரீதியாகவும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அந்த காலகட்டத்தில் நடக்கும் தேர்தல் உங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்துகிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள தம்மாலான அனைத்தையும் செய்தாலும் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காது. அதே சமயம், 2018 இல் தேர்தல் நடந்தால், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்” எனத் தெரிவித்திருக்கிறார்களம்.
ஆக, அவர் நம்பும் சாதகத்தின் பலன்களும் உளவுத் துறை அறிக்கையும் அதிர்ச்சியைக் கொடுக்க நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது என சுட்டிக் காட்டுகிறார்கள் அரசு ஆணைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள அலுவலர்கள்.
சுமார் 25 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் இலக்குடன், உற்பத்தித் துறையின் வளர்ச்சியை 26 சதவிகிதமாக உயர்த்துவதற்காக  மோடி அரசால் அறிமுகப்பட்ட ”மேக் இன் இண்டியா” (make in india ) திட்தின் ஊடாக  இதுவரை 3 லட்சத்துக்கும் குறைவான திட்டங்களே  செயல்படுத்தப் பட்டுள்ளது நாட்டை வளர்ச்சிப் பாதையில் நகர்த்தவும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்து இளைய தலைமுறையினரை ஈர்க்கவும் திட்டமிடப்பட்ட இதிலும் கூட எதிர்பார்த்த விளைபயன் கிடைக்கவில்லை மோடி அரசுக்கு.
இதற்கு பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி முறைகளே முதல் காரணமாக இருக்கின்றன என விசனப் படுகின்றனர் அதிகாரிகள். மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள் நிறைவேறாத நிலையில் மத்திய அரசின் மீது மனக்குறை ஏற்படுவது இயல்பான ஒன்றுதான் என அலுவலர்கள் விவரித்ததை எந்த விமர்சனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த  பிரதமர் மோடி இன்னும் ஓராண்டு காலத்துக்கு ஆட்சி நீடித்தால், மக்களின் மனக்குறைகள் அதிகரிக்கவே செய்யும் என்கிற மனநிலைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
”மோடியின் நான்காண்டு கால ஆட்சி, எந்தவிதமான தாக்கத்தையும் மக்களிடத்தில் ஏற்படுத்தாததால் நடப்பு நிதிநிலை(பட்ஜெட்) அறிக்கையில் தீவிர கவனம் செலுத்தபணிக்கப்படுளனர் நிதி அமைச்சு அதிகாரிகள். நிதிநிலை அறிக்கையின்  சாதக பாதகங்களைக் கொண்டு, நடப்பு ”பட்ஜெட்” கூட்டத் தொடரிலேயே தேர்தலை முன்கூட்டியே நடத்த சட்டத்திருத்தம் கொண்டு வரலாமா...? என ஆலோசிக்கப்பட்டிருக்கிறதாம்.
முன்கூட்டியே தேர்தல் நடத்துவது சாத்தியமா...? என தலைமைத் தேர்தல் ஆணையத்தோடு தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டபோது, நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியுமா...? என மத்திய அரசு கேட்டதாகவும், ”குறுகிய காலத்தில் நடத்த முடியாது, ஒரு வருடகால இடைவெளி இருந்தால் மட்டுமே அதற்காகத் திட்டமிடலாம்” என தெரிவித்ததாகவும் கூறினர்  அதேவேளையில் நாடாளுமன்றத்துக்கு மட்டும் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டுமானால், எப்போதும் தயாராகவே இருக்கிறோம்” என்றும் சொல்லி இருக்கிரரர்கலாம்  தேர்தல் ஆணைய அலுவலர்கள்.
இதன் வெளிப்பாடாக புதிதாக ஐந்து(5) லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்க ஆணையம் திட்டமிட்டுள்ளது எனவும் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதுபற்றி மத்திய அரசு திடீரென முடிவெடுக்கலாம் என்வும்  தெரிவித்தனர் தேர்தல் ஆணைய அலுவலர்கள்.
நாடாளமன்றத் தேர்தலுடன் மாநிலத் தேர்தல்களும் நடாத்தப் பட்டால் இன்னமும் இரண்டு வருடத்தைக் கூட நிறைவு செய்யாத,தேர்தலுக்கு செலவு செய்த தொகையை கூட சம்பாதிக்காத,மக்களின் மாபெரும் எதிர்பலையை சந்தித்துவரும்  தமிழகத்தின் அதிமுக அரசுக்குதான் அது பெரும் அதிஸ்டி வைத்தியமாக  இருக்கபோகிறது.
அனைத்து முக்கியத் தொழில்களையும் தம் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும் அரசியல் ரீதியான எதிர்ப்பே எழாத வகையில் அடக்குமுற ஆட்சி ஒன்றைக்  கொண்டுவர நினைக்கிறாரா நரேந்திர மோடி....?
ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்கிற எண்ணம் இந்தியாவை அதிபர் (மன்னர்)  ஆட்சிமுறைக்கு அழைத்துச் செல்வதற்கான தொடக்க நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. இதைக் கட்டாயமாக்குவது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கே விரோ தமானது.
சோதிடத்தை நம்பி தேர்தலை நடத்துவதை அவசியமாகக் கருதுவது மூட நம்பிக்கையின் உச்சம் என்பது பார்பன சிந்தனை ஆளர்களுக்கு எங்கே விளங்கப் போகிறது.ஏற்கனவே இலங்கையில் ஒருவர் (மகிந்த ராஜபக்ச) சோதிடத்தை நம்பி ஆட்சியையே பறிகொடுத்த வரலாற்றுப் புகை அடங்கு முன்னர் மற்றொரு மூட  நம்பிக்கை வரலாறு அரங்கேறப் போகிறதா...?
இத்தகைய சிந்தன்யின் முன்னேற் பாட்டோடு தேர்தலை முன்கூடியே நடத்துவது என்பது வல்லாண்மைக்கே இந்தியாவை இட்டுச் சென்றுவிடும் என்கிறனர் நோக்கர்கள்.

SHARE

Author: verified_user