Tuesday, February 13, 2018

சிங்கள மக்கள் அதிகம் ஏன் மஹிந்தவை விரும்புகின்றனர்? ரணிலை ஏன் வெறுக்கின்றனர்?

SHARE

லத்தீப் பாரூக்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தாங்கள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்ததும் 
மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற வெட்கக்கேடான ஊழலின் வெளிப்பாடு ஆகிய இரண்டுமே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பிரதிநிதியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலில் அமோக வெற்றியீட்ட உதவிய இரண்டு முக்கிய காரணிகளாக இருக்க முடியும்.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியை அவமானகரமான இரண்டாம் இடத்துக்குத் தள்ளிய அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
பரவலான குற்றங்கள் ,ஊழல், நாட்டின் தேசிய செல்வத்தை கொள்ளையடித்தல் நிர்வாகச் சீர்கேடு மற்றும் இனவாத விரோதங்களை ஊக்குவித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த அநியாயமான மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின்மீது வெறுப்பும் விரக்தியும் கொண்டிருந்த மக்கள் மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க கூட்டணிக்கு வாக்களித்தது இந்த தீமைகளில் இருந்து இவர்கள் நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில்தான்.
உண்மையில் மைத்திரி - ரணில் குழு நாட்டுக்கு அளித்த வாக்குறுதி இதுதான். முற்றுகைக்கு ஆளான நிலையில் இருந்த மக்கள் நம்பிக்கை வைத்து இவர்களுக்கு ஆணையை வழங்கினார்கள். எனினும் மூன்று வருடங்களுக்குப் பின்னர் இன்று அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிக மோசமான தோல்வியை அடைந்துள்ளார்கள். ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட முந்தைய அரசாங்கத்தின் அமைச்சர்களைக் கொண்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட ஆரம்பத்திலிருந்தே குழப்பம் தோன்றியிருந்தது. இந்த ஊழல் பேர்வழிகள் நீதித்துறையை கவசமாகக் கையாண்டார்கள்.
இதிலுள்ள முரண்பாடு என்னவென்றால் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த இதே ஆட்கள் சுதந்திரமாக உலாவியதுடன் அரசாங்கத்துக்கு சவால் விடவும் அரம்பித்தார்கள். இந்த ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற நீதித்துறையை கையாழுவதாக ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதம மந்திரி விக்கிரமசிங்க ஆகிய இருவர்மீதுகூட குற்றம் சுமத்தப் பட்டது.
பொதுவாகவே மக்கள் விரக்தி நிலையில் இருந்தார்கள். இந்த விரக்திக்கு கூட்டுச் சேர்வதைப்போல, யகபாலன அரசாங்கத்துக்குள்ளேயே ஊழல் வளர்ந்து வருவது மக்களை மேலும் அசொளகரியம் மற்றும் களைப்பு என்பனவற்றுக்குள் தள்ளியது. பிணைமுறி மோசடியில் ஊழல் இடம்பெற்றருப்பது முழு நாட்டையுமே அதிர்ச்சி அடையவைத்தது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட வெட்கக்கேடான வெளிப்பாடுகள் அதை இன்னும் மோசமடையச் செய்தது.
பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு களங்களிலும் அமெரிக்காவின் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். உதாரணத்துக்கு உள்நாட்டு இறைவரி திருத்த மசோதா வரைவை மேற்கொள்ள  சர்வதேச நாணய நிதியம் ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்தாது ஜனாதிபதியும் மற்றும் பிரதமரும் இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்காக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
இந்த வாரம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் சில ஆசனங்களை வென்றதுக்கு மாறாக, சமிக்ஞைகள் தெரிவிப்பது தற்போதைய தலைவரின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினால் சொந்தமாக ஒரு அரசாங்கத்தை அமைக்க ஒருபோதும் இயலாது என்பதையே. இரண்டு டசினுக்கும் மேற்பட்ட தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்த பின்பும் நாட்டை ஆள்வதற்கு ஐதேக வுக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது. எனினும் அந்த வாய்ப்பை அது தவறவிட்டுள்ளது.
அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுபான்மையினர்மீது விசேடமாக முஸ்லிம்கள்மீது மேற்கொள்ளப்படும் இனவாத தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருவதாக வாக்குறுதி வழங்கினார்கள். அரசாங்கத்துக்கு மொத்தமாக வாக்களித்த முஸ்லிம்களை பாதுகாப்பதற்குப் பதிலாக கிட்டத்தட்ட தாங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக முஸ்லிம்கள் விரைவாகவே உணரவேண்டிய நிலை ஏற்பட்;டது. ஜின்தோட்டயில் முஸ்லிம்;கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் முஸ்லிம் விரோத இனவாதம் இன்னும் உயிருடன் இருப்பதையே காண்பிக்கிறது.
வெளிநாட்டுக் கொள்கைகளும் திசையறியாது தடுமாறுகிறது. உதாரணத்துக்கு மியன்மாரில் நடைபெற்ற முஸ்லிம்களின் இனப்படுகொலை பற்றிய பிரச்சினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இரண்டுமுறை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டிருந்த போதிலும் அதைக் கண்டிக்க எமது அரசாங்கம் தவறிவிட்டது.
பிரதமர் பொருளாதாரத்தைப் பற்றி தொடர்ந்து வேறுவிதமாகக் கூறிவந்தாலும் அது மிகவும் மோசமான நிலையிலேயே உள்;ளது. அதிகமாகப் பேசப்பட்ட வெளிநாட்டு முதலீடு ஒருபோதும் யதார்த்த நிலைக்கு வரவில்லை.  சிறிய வியாபாரிகள் கூட, தங்கள் வியாபாரம் முன்னேறும் என்று எதிர்பார்த்த போதிலும் வழமையான வியாபாரம் கூட படுத்துவிட்டது என்று சொல்லத் தொடங்கியுள்ளார்கள்.
இதற்கிடையில் அனைத்துப் பொருளாதாரக் குறைபாடுகளுக்கும், தோல்விகளுக்கும் மற்றும் பிணைமுறி ஊமல் மோசடிக்கும் ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் விக்கிரமசிங்காவையே தேர்தல் கூட்டங்களில் குற்றம் சாட்டுவது ஒரு அழிவுகரமான அடியாகும், ஒருவேளை ஐக்கிய அரசாங்கத்தின்மீது விழும் இறுதி அடியாகவும் இருக்கலாம்.
உண்மையில் சனிக்கிழமை நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) பெற்றுள்ள அமோக வெற்றியானது, மக்களின் மனநிலையை ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதம மந்திரி விக்கிரமசிங்கா ஆகியோர் புரிந்துகொள்ள மிக மோசமாகத் தவறியதின் வெளிப்பாடாகும்.
சமீபத்திலும் மற்;றும் தொலைதூர எதிர்காலத்திலும் நாட்டின் பயன்பாட்டிற்காக என்ன சேமித்து வைக்கப் பட்டுள்ளது என்பதற்கு இவர்களே பொறுப்பாவார்கள்.

மொழிடிபயர்ப்பு: எஸ்.குமார்
SHARE

Author: verified_user