Friday, February 16, 2018

சிறுவர்களைப் பயன்படுத்தி வருமானமீட்டும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

SHARE


சிறுவர்களைப் பயன்படுத்தி வருமானமீட்டும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

தற்போதைய நிலையில் கொழும்பு மற்றும் ஏனைய நகர்ப்புறங்களில் சிறுவர்களை பயன்படுத்தி வருமானமீட்டல், சிறுகுழந்தைகளை காட்சிப்படுத்தி அவர்களுக்கு கடுமையான வியாதி காரணமாக சிகிச்சைக்கு பெரும் பணம் தேவைப்படுவதாக ஏமாற்றிப் பணம் பறித்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

இவை இலங்கையின் சிறுவர் பாதுகாப்பு சட்டதிட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் பிரகடனங்களுக்கு எதிரானவை மட்டுமன்றி கடும் தண்டனைக்குரிய குற்றங்களுமாகும்.
இந்நிலையில் சிறுவர்களை பயன்படுத்தி வருமானமீட்டும் நபர்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பதற்காக சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாறுவேடங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் பொதுமக்களும் 1929 இலக்கத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user