Saturday, February 17, 2018

உள்ளுராட்சி சபை கதிரைகளால் தொடர்ந்தும் குழப்பம்; கூட்டமைப்பு பிளவுபடலாம்

SHARE


தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வெற்றிகொள்ளப்பட்ட உள்ளுராட்சி சபைகளிற்கான தவிசாளர்கள் தொடர்பில் பங்காளிகளிடையே மோதல்கள் உச்சம் பெற்றுள்ளது.இதனால் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை நகரசபை முதல் பல சபைகளது தவிசாளர்கள் தொடர்பில் அறிவிப்புக்களினை வெளியிட தாமதிக்கப்படுகின்றதென உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மன்னார் நகரசபை தவிசாளர் தேர்வில் நேற்று பெரும் ரகளை நடந்துள்ளதுது. ஒரு கட்டத்தில் தமிழரசுக்கட்சி எம்.பி சாள்ஸ் நிர்மலநாதனும் நகரசபை தலைவராக தேர்வான ஜெராட் என்பவரும் கைகலப்பு வரை சென்றுள்ளனர்.

மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய கட்சி தலைவர்களுடன் தமிழரசுக்கட்சியின் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்துகொண்ட கூட்டத்திலேயே கைகலப்பு வரை சென்றுள்ளது.
மன்னார் நகரசபை தவிசாளரை தேர்வு செய்யும் பொறுப்பு ரெலோவற்குரியதென ஏற்கனவே கட்சி தலைவர்கள் மத்தியில் முடிவாகியிருந்தது. இதைமீறி, நேற்று சாள்ஸ் நிர்மலநாதன் ரகளை செய்தார். தமிழரசுக்கட்சிக்கே தவிசாளர் பதவி தர வேண்டுமென ரகளை செய்தார்.
இந்த ரகளையை தாங்க முடியாத கட்டத்தில், தவிசாளரை அறிவிக்கும்படி மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்டார்.

ஞானப்பிரகாசம் ஜெராட்டை தவிசாளராக அறிவித்திருந்தார்.
இதே போன்று வவுனியா நகரசபை தலைவராக தெரிவாகியுள்ள சேனாதிராசா தொடர்பிலும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு மாறாக சுழற்சி முறை திட்டத்தை சத்தியலிங்கம் மறுதலித்துள்ளதால் சர்ச்சை மூண்டுள்ளது.
இதே போன்று சுன்னாகம் பிரதேசசபையிலும் தமிழரசும் புளொட் அமைப்பும் முட்டிமோதிவருகின்றன.

சாவகச்சேரி,காரைநகர்,வேலணை,பருத்தித்துறையென பல சபைகளில் இத்தகைய மோதல்கள் நீடிக்கின்றன.
இச்சபைகளில் எவற்றிலும் பெரும்பான்மை பெறாது கூட்டமைப்பு பின்னடைவேயே சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user