Thursday, February 15, 2018

கைவிடப்பட்டுள்ள வெடிபொருள்களில் எச்சங்களின் சிதறல்களால் மக்கள் அச்சம்

SHARE

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கைவிடப்பட்டுள்ள வெடிபொருள்களில் எச்சங்களின் சிதறல்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வெடிபொருள்கள் மீட்பு, வெடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் வலைஞர்மடம், வட்டுவாகல், புதுமாத்தளன் போன்ற பகுதிகளில் இடம்பெற்றுவருகின்றன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலையும் வீட்டுத்தோட்டத்தைத் துப்பரவு பணிசெய்து தீ மூட்டியபோது வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அயலிலுள்ள வீடுகளுக்கு சிறு பாதிப்புக்கள் ஏற்பட்டபோதும் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு வெடிபொருள்கள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் வெடிபொருள்கள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ள போதும் வெடிபொருள்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. இதுவரை 50க்கும் மேற்பட்ட இவ்வாறான வெடிப்புச் சம்பவங்கள் மற்றும் வெடிபொருள்கள் மீட்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
SHARE

Author: verified_user