Thursday, February 15, 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் நெருக்கடி

SHARE

பெப்ரவரி 10ல் நடந்த தேர்தலில் ஐதேகவுக்கு கிடைத்த வாக்குகளின் பெருவீழ்ச்சி ஏ
ற்படுத்தியுள்ள நெருக்கடி குறைக்கக்கூடிய ஒன்றல்ல, நீண்ட காலமாக ஆட்சியை நிறுவிய அரசாங்கத்துக்கு கிடைத்த முன்னோடியில்லாத செங்குத்தான ஒரு வீழ்ச்சி மற்றும் உள்ளுராட்சி தேர்தல்கள்  அரசாங்கத்துக்கு ஆதரவான விடயங்களாகும். பெப்ரவரி 10ல் ஐதேகவின் சுருக்கம் அதன் பின்விளைவாகும் ஐதேகவின் நெருக்கடி அதற்குக் காரணம் இல்லை.

அந்த நெருக்கடி நீண்ட காலமாகவே உள்ளது. ஐதேகவின் நெருக்கடி அதன் தலைமைத்துவத்தின் நெருக்கடியாகும் மற்றும் ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் அதன் மூத்த தலைவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் கொல்லப்பட்ட காலத்தில் இருந்தே ஏற்பட்ட நெருக்கடியாகும். ஐதேக வின் நெருக்கடி பிரேமதாஸவின் தலைமைத்துவத்துக்குப் பின்னான நெருக்கடி மற்றும் அது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது.
ஒன்றில் கட்சியானது இந்த வாரத்திற்குள் அதற்குத் தீர்வு காணவேண்டும் அல்லது அது புற்று நோய் போல மாறி ஐதேக வினை மட்டுமன்றி அநேகமாக அரசாங்கத்தையும் கொன்றுவிடும்.
1994ல் இருந்தே திரு.ரணில் விக்கிரமசிங்கா கட்சியின் தலைவராக உள்ளார். இந்த ஜனநாயக உலகத்தில் எந்த ஒரு கட்சியுமே கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக ஒரே தலைவரைக் கொண்டிருக்கவில்லை - ஸ்ரீலங்காவின் ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர. அது ஐதேக மிக மோசமாகப் பேசக்கூடிய ஒரு சாதனை அல்ல. இதில் இன்னும் மோசமானது என்னவென்றால் ரணில் விக்கிரமசிங்காவின்  கால் நூற்றாண்டு தலைமைத்துவம் மிகவும் பயங்கரமான தோல்வியைச் சந்தித்துள்ளதுதான். இந்த இரண்டரை தசாப்த காலத்தில் ஐதேக ஒரு தரமாவது நாட்டுக்குத் தலைமைதாங்கியது கிடையாது. இயன்றவரை அதனால் 2ம் இடத்துக்கே வர முடிந்தது. இதை வேறுவிதமாகச் சொன்னால், திரு விக்கிரமசிங்க கட்சியின் தலைவராக இருந்தவரைஃ இருக்கும்வரை நாட்டை வழி நடத்துவதற்கு தகுதியான ஒன்றாக ஐதேக வாக்காளர்களால் உணரப்படவில்லை. 1999 மற்றும் 2005ல் அவர் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2010ல் போட்டியில் அவர் ஒரு பதிலாளாக இருந்தார் ஆனால் அதிலும் தோல்வியே அடைந்தார். அவர் ஒரு பதிலாளாகப் போட்டியிடுவதானால் அதை அவரும் மற்றும் ஐதேக வும்; சொல்லியிருக்க வேண்டும் ஆனால் வெளிப்படையாக அப்படித் தெரிவிக்கப் படவில்லை.
2015ல் அவர் தயக்கத்துடன் ஒரு பதிலாளாகப் பின்துணை நல்கி அதில் வெற்றியும் பெற்றார், ஆனால் பதிலாள் என்பது ஒரு பொம்மை அல்ல என்பதை அவர் மறந்துவிட்டார். அவரது பதிலாள் தகமையை வெற்றி பெறச்செய்த அதே காரணகர்த்தாக்கள் அதாவது சிங்கள - பௌத்த, ஐதேக அல்லாத, மத்திய - இடது தளங்கள், அந்த பதிலாள் தன்னலமின்றி சேவையாற்ற வேண்டும் என்பதற்காக அவரை வெற்றியடையச் செய்த சக்திகள் இப்போது அவரது இராஜினாமாவைக் கோருகின்றன.
ஒரு ஜனநாயகக் கட்சி கால்நூற்றாண்டுகளாக ஒரே தலைமையை தக்கவைத்திருந்தால் அது வெற்றிகரமான ஒன்றாக இருந்தால், என்ன விளைவுகளை  உருவாக்கியிருக்கும் என்பது புரிந்து கொள்ளக்கூடியது. திரு. விக்கிரமசிங்கா ஒரு வெற்றியாளர் இல்லை என்பது வெளிப்படை, ஒரு காலத்தில் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த மகத்தான ஒரு  பழைய கட்சியான ஐதேக ஸ்ரீலங்கா தேசத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்து ஒரு தலைமுறை அல்லது அதற்கும் மேலான காலத்திற்கு நாட்டை வழிநடத்தவில்லை.
ரணில் விக்கிரமசிங்கா தலைவராக இருக்கும்வரை அவர் மற்றும் மிகவும் முக்கியமாக ஐதேக ஒருபோதும் நாட்டுக்குத் தலைமையேற்க முடியாது என்கிற எளிய, சுய பரிசோதனையான உண்மையை ஐதேக வினால் புரிந்துகொள்ள முடியவில்லையா? இதில் எந்தப் பகுதி ஐதேகவுக்கு புரியாதுள்ளது?
அதிகம் தேசியரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்க மற்றும் தேர்தல்முறையிலான தலைமைத்துவ மாற்றத்துக்கு ஐதேகவில் உள்ள தடையை நீக்க உதவக்கூடிய அனுதாபமுள்ள ஒரு ஜனாதிபதியை கொண்டிருக்கும்போது, ஐதேக இந்த தருணத்தில் ரணிலை நீக்க ஏன் இடம் கொடுக்கவில்லை? ஐதேகவினைப்பற்றி இது என்ன சொல்கிறது?
ஐதேக இந்த வாரப் பிற்பகுதிக்குள் ஒரு மாற்றுத் தலைவர் மற்றும் பிரதம மந்திரியை உருவாக்குவதற்காக ரணில் விக்கிரமசிங்க மீதான வெளியேற்றும் விசையை அழுத்தவில்லை என்றால் அது ஒரு கடைசியான நெருக்கடியாகவே இருக்கும் மற்றும் அந்த முடிவை அடைய நீண்டகாலம் எடுக்காது இல்லாமலும் அது அழகானதாகவும் இருக்கும்.
இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த அடைப்பு நீண்ட காலத்துக்கு முந்திய தந்தைமார் மற்றும் மகன்மார் கதையை நினைவுபடுத்துகிறது. திரு.விக்கிரமசிங்காவின் கருத்தியலாளரும் மற்றும் அவரது பிரதான அரசியல் நண்பரும் மங்கள சமரவீர ஆவார். இரண்டு மனிதர்களும் அழிவுகரமான ஒன்றுடன் தொடர்புள்ளதுமான அரசியல் வரலாற்றைக் கொண்ட தந்தைமாரைக் கொண்டிருந்தார்கள். 1952ம் ஆண்டின் ஐதேக அரசாங்கம் பொருளாதார அதிர்ச்சி வைத்தியத்தை நடைமுறைப்படுத்தியது மற்றும் அதற்குப் பரிசாக ஆகஸ்ட் 1953ல் ஹர்த்தால் என அழைக்கப்படும் பாரிய கிளர்ச்சியைப் பெற்றது, தாராளவாத பிரதமரான டட்லி சேனநாயக்கா இராஜினாமா செய்வதற்கான போதிய உணர்திறனைக் கொண்டிருந்தார் மற்றும் அதன் காரணமாக அடுத்த தசாப்தத்தில் திரும்பிவந்து ஒரு அரசாங்கத்தை உருவாக்க முடிந்தது. ஒரு சமூக மனநிலையில் ஐதேக மிகவும் மெய்யறிவுள்ளதான ஒரு சுயவிபரத்தை மாற்றுவதற்கு அது மிகவும் புத்திசாலித்தனமானதாக இருந்திருக்கும், ஆனால் அதற்குப் பதிலாக திரு.ரணில் விக்கிரமசிங்காவின் தந்தையான, எஸ்மண்ட், ஒரு முன்னாள் ட்ரொட்ஸ்கிசவாதியாக இருந்து வலதுசாரி மூலோபாய மற்றும் கருத்தியலாளராக மாறியவர் (அமெரிக்காவிலுள்ள முன்னாள் ட்ரொஸ்கிஸ்ட்டுகளாக இருந்த பல நவ கன்சர்வேட்டிவ்களின் முன்னோடி)  இன்று ரணில் விக்கிரமசிங்க பின்பற்றுவதைப் போன்ற ஒரு உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
ஆகஸ்ட் 1953 ஹர்த்தாலின் அதிர்ச்சி பின் தொடர்ந்தது, ஒரு விவேகமான கொள்கை மையம் மற்றும் பின்வாங்கலாக இல்லாமல் மிகவும் கடுமையான மேற்கத்தைய சார்பு, வலதுசாரி பருந்துப் பாணி மற்றும் சேர் ஜோண் கொத்தலாவலா வடிவத்திலான பொருளாக அது இருந்தது. ரணில் விக்கிரமசிங்காவின் தந்தையான எஸ்மண்ட், முக்கியமாக மேற்கத்தைய சார்புடைய ஆபிரிக்கா ஆசிய விரோதத்துக்கு சாய்வுடைய 1955ம் ஆண்டின் பாண்டுங் உச்சி மாநாட்டினை உருவாக்கியவர்களில் ஒருவராவார். 1953ம் ஆண்டு ஹாத்தாலால் தூண்டிவிடப்பட்டதை விட இது இன்னும் பெரிய துருவ முனைப்புள்ளதாக இருந்தது. கலாச்சார முனைவாக்கம் மற்றும் வாழ்க்கைப் பாணிப் பிரச்சினைகள்  சக்தியாக இந்தப் படத்துக்குள் நுழைந்தன. மிதவாத எதிர்க்கட்சியாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட பண்டாரநாயக்காவின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமூக ஜனநாயகத்தில் இருந்து பெரும்பான்மையின தேசியவாதத்துக்கு மாற்றப்பட்டு 1956ல் நடைபெற்ற தேசிய தேர்தலில் ஐதேக வினை முற்றாகத் துடைத்தழித்து பல தசாப்தங்களுக்கு அதைப் புதைத்தது.
அந்த நேரத்தில் மங்கள சமரவீரவின் தந்தை வரலாற்றின் சரியான பக்கத்திலேயே இருந்தார், ஆனால் பின்னர் 1964ல் தற்போதைய பிரதமரின் தந்தையான எஸ்மண்ட் விக்கிரமசிங்காவினால் ஸ்ரீலசுகவில் இருந்து பிளவுபட்டு ஐதேகவுடன் இணைவதற்கு இணங்க வைக்கப்பட்டார். மங்கள சமரவீர இப்போது அவர் தந்தை விட்ட இடத்தில் தொடர்கிறார். அது சமூக இருப்பு அது சமூக உணர்வை நிர்ணயிக்கிறது என்று கார்ல்மாக்ஸ் சொல்லியுள்ளார். அநேகமாக ரணில் மற்றும் மங்கள ஆகியோர்  ஏன் அரசியல் கருத்தியல்புள்ள இரட்டையர்களாக இருக்கிறார்கள் என்பதை அது விளக்குகிறது.
எனவே ஐதேக ரணில் - மங்கள வரிசை நிலவுவதற்கு அனுமதித்தால் என்ன நடக்கும்? 1950 மற்றும் 1960களில் நடைபெற்ற அதே விஷயம் தான் இப்போதும் நடைபெறும். ஐதேக - ரிஎன்ஏ அரசாங்கம் ஒன்று அல்லது ரிஎன்ஏ ஆதரவுடனான ஒரு ஐதேக அரசாங்கம் அமையலாம். ஒவ்வொரு வார்த்தையின் அர்த்தத்திலும் இது ஒரு சிறுபான்மை அரசாங்கமாகவே இருக்கும்: சிறுபான்மையினரால் சிறுபான்மையினருக்கான ஒரு சிறுபான்மையினரின் அரசாங்கமாக அது அமையும். அது அனுதாபமற்ற மற்றும் உதவியற்ற ஒரு ஜனாதிபதியினால் சூழப்பட்டதாக இருக்கும், மற்றும் பெருமளவு பலமுள்ள ஒரு எதிர்க்கட்சி இருக்கும் அது இரண்டு முகாம்களை உள்ளடக்கியதாக இருக்கும்: மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான எழுச்சி பெறும் தாமரைமொட்டு - கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஜேவிபி மற்றும் ஐதேகவில் இருந்து பிளவுபட்ட சிலருடன் இணைந்து பணியாற்றும் ஸ்ரீலசுகவின் பெரியதொரு தொகையினர்
ஒரு ஐதேக - ரிஎன்ஏ அரசாங்கம் என்பது முழு பந்து விளையாட்டையும் மாற்றுகிறது அல்லது உருவகம் மற்றும் அளவுகோல் ஆகிய இரண்டையும் மாற்றுகிறது, இதனால் மைதானம் ஆபத்தானதாக மாறுகிறது.
வெகுஜனங்கள் பதவிக்கும் மற்றும் ஆட்சிக்கும் விரோதமான மனநிலையில் இருப்பார்கள். அந்த ஆட்சியானது மேற்கத்தைய உயரடுக்கு சார்பானதாகவும் நவதாராள பொருளாதார கொள்கையை பின்பற்றுவதாகவும் மற்றும் ஒரு கூட்டாட்சிக் கொள்கையுடைய சிறுபான்மையின் ஆதரவுடன் இயங்குவதாகவும் இருக்குமாயின் பின்னர் எதிர்ப்பலைகள் பிரதிபலிப்பது ஆளும் உயரடுக்கு ஆட்சியின் கலவையை  ஆனால் ஒரு தலைகீழ் வடிவத்தில் அல்லது உட்பக்கம் வெளிப்புறமாக திரும்பிய நிலையை. 1955 - 56ல் நடந்தது போல வளர்ச்சிபெறும் எதிர்ப்பு அலைகள் இனவாத தேசியம் மற்றும் இனவாத மதம் ஆக மாற்றம் பெறும். இது அடுத்த வருட பிற்பகுதியில் ஒரு குறிப்பிட்ட வகையான ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக மாற்றம் பெறுகிறது. 1956ம் ஆண்டு மனநிலையில் ஒரு ஜனாதிபதிக்கான வெகுமதியை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
இதே கதை 1965 - 1970 களில் மீண்டும் திரும்பியது, எஸ்மண்ட் விக்கிரமசிங்காவின் செல்வாக்கினால் உந்தப்பட்ட ஐதேக, மீண்டும் ஒருமுறை தமிழ் கட்சிகளுடன் இணைந்து(அதன் தூண்டுதலால் பிளவுபட்ட தனிப்பட்ட உறுப்பினர்களுடன் இணைந்து) ஒரு கூட்டணி அரசை உருவாக்கியது. ஐதேக - தமிழ் காங்கிரஸ் கலவையான அந்த அரசாங்கம், ஸ்ரீலசுகவினால் மட்டுமல்லாது தொழிற்சங்க அடிப்படையிலான இடதுசாரிக் கட்சிகள் மற்றும் ஆரம்ப நிலையில் இருந்த ஜேவிபியினால் கூட ஜனரஞ்சக இனவாத திசையை நோக்கி கடுமையாக ஊசலாடியது. ஐதேக 1970 தேர்தல்களில் படு தோல்வியடைந்தது, தோற்றவர்கள்மீது பரவலான தீ வைப்பு, மற்றும் வன்முறை என்பன நிகழ்த்தப்பட்டதுடன் சில இடங்களில் மரணத்தையும் சந்திக்க வேண்டி நேர்ந்தது.
ஐதேக அதே தவறுகளை திரும்பவும் செய்யும் நிலையில் உள்ளது. அது சிறிது நேரம் எடுத்து இன்னும் சில மாதங்களில் வரவுள்ள மாகாணசபைத் தேர்தல்களில், ஐதேக - ரி.என்.ஏ அரசாங்கம் அல்லது ஒப்பந்தம் காரணமாக வரவுள்ள பேரழிவுகரமான தேர்தல் விளைவுகளைப் பற்றி சற்றுச் சிந்திக்க வேண்டும் (1960 வகையான ஸ்ரீலசுக ஆதரவாளர்கள் ஐதேக அரசாங்கம் தமிழ் கட்சிகளுடன் இரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டலாம்). இந்தப் போக்கின் உச்சக்கட்டம் அடுத்தவருட இறுதியில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளரில் இடம்பெறும், மொட்டு மற்றும் ஸ்ரீலசுக ஆகிய இரண்டும் சேர்ந்து  உயரடுக்கு கஜபா படைப்பிரிவினர் நடத்தும் கடும் தாக்குதல் போல ஐதேக வினை தாக்கலாம். இவை அனைத்தும்  ஒரு பாராளுமன்றத் தேர்தலில் உச்சம் பெறலாம் அதில் மகிந்த ராஜபக்ஸ வெற்றி பெறுவார், அது ஒரு நல்ல விடயம்தான். ஆனால்;; இன ரீதியான விளிம்பிலுள்ள ஒரு மேடையைத் தான் நாங்களும் அவரும் விரும்புகிறோம்.
ஐதேக தேர்தல் அழிவினைத் தடுக்க முடியும் மற்றும் விஷயங்களை தன்னைச் சுற்றி திருப்பவும் முடியும், 1988ன் பிற்பகுதியில் அரசியல் ரீதியாக இதேபோன்ற சூழ்நிலையில் மற்றும் அரசியல் ரீதியாக இதைவிட வன்முறைகள் நிறைந்திருந்த போது செய்ததை இப்போதும் செய்தால் :ஒரு மாபெரும் ஜனரஞ்சகத் தலைவரைத் தெர்ந்தெடுப்பதின் மூலம் சுயாதீனமான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் வெகுஜன மனநிலையைப் படிப்பதுடன் சமூக அலைகளை அடையவும் முடியும்.
ஆனால் ஐதேக இன்று அப்படிச் செய்ய வேண்டும், அல்லது பகுத்தறிவுள்ள ஐதேகவினர்  கட்சியில் இருந்து விலகி ஒரு புதிய கட்சியை உருவாக்க வேண்டும் - அவர்களின் சொந்த மொட்டினை - அல்லது மிதவாத ஸ்ரீலசுக வினரோடு இணைந்து ஒரு புதிய மைய அமைப்பாக ஜனாதிபதி சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கவேண்டும். எல்லாமே இடர்நிலையிலேயே உள்ளது. ஐதேகவின் வரலாற்றில் முன்னொருபோதும் இப்போது உள்ளதைப் போன்ற கடுமையான அவசரம் (மார்ட்டின் லூதர் கிங்) உணரப்படுவதற்கான அவசியம் ஏற்பட்டதில்லை, அனுபவப்பட்டு மிகத் தீவிரமாக புரிந்து கொள்ளப்படவுமில்லை.
SHARE

Author: verified_user