Tuesday, February 13, 2018

நாட்டை ஆளப்போகும் ரணில்! தேர்தல்கள் இனி நடைபெறுவது சந்தேகம்; ஐ.தே.க புரட்சி ஆரம்பம் - இனி மஹிந்த அடங்குவார்

SHARE

புதிய குரல்  கொழும்பு செய்தி அலுவலகம்

30 பேரைக் கொண்ட அமைச்சரவையுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைக்க அந்த கட்சியினர் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் சற்றுமுன்னர் தெரிவித்தார்

நாடாளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அது மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்

மகிந்த ராஜபக்ச தரப்பை கடுமையாக எதிர்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுனவுடன் இணைந்தால், இவர்களில் சிலர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களை கொழும்பில் இருந்து வெளியேற வேண்டாம் என கட்சியின் தலைமைத்துவம் அறிவித்துள்ளது.

இனி நாட்டில் எந்த தேர்தலும் நடக்க வாய்ப்பில்லை எனவும், மக்களுக்கு தனியாக ஆட்சியமைத்து சேவைகளை துரிதமாக வழங்கிய பிறகே தேர்தலை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user