Friday, February 2, 2018

மஹிந்தவின் குடும்பமே இணைந்து கொள்ளையிட்டது - சந்திரிகா காட்டம்

SHARE

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்தவர்கள் ஊழல் மோசடிகளை மேற்கொண்டு நாட்டின் எதிர்கால பயணத்தை வீழ்ச்சி போக்கிற்கு இட்டு சென்றதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நீர்கொழும்பு – பிடிபன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி, அவரது சகோதரர்கள், மகன்மார்கள், பாரியார், அவரது சகோதரர்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து நாட்டின் அபிவிருத்திக்கான அனைத்து பணத்தை கொள்ளையிட்டனர்.

எனது அரசாங்க காலப்பகுதியில் கையெழுத்தான கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதை திட்டத்தை தானே ஆரம்பித்து வைத்ததாகவும், அதனை மஹிந்த ராஜபக்ஷ நிறைவு செய்து வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவும் வெறுமனே நிறைவு செய்யவில்லை.

கட்டுநாயக்க அதிவேக திட்டத்தை தாம் 140 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கைச்சாத்திட்டிருந்ததாகவும் அதனை மஹிந்த ராஜபக்ஷ சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நிறைசெய்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டை வீழ்ச்சி போக்கிற்கு இட்டு சென்று பாரிய கடன் சுமையை அரசாங்கத்திற்கு விட்டு சென்றதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: