Saturday, February 17, 2018

யாழ்.மாநகரசபை; யாருக்கு ஆதரவு? – தீர்மானிக்கவில்லை என்கிறார் டக்ளஸ்

SHARE


தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி இரண்டு கட்­சி­க­ளும் ஆட்சி அமைக்க உரிமை கோரி­னால், யாருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்­பது தொடர்­பில் இன்­ன­மும் முடி­வெ­டுக்­க­வில்லை. இவ்­வாறு ஈ.பி.டி.பி.யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­தார்.
சபை­க­ளில் ஆட்சி அமைக்­கும் கட்­சிக்கு மக்­கள் நலன் கருதி தமது கட்சி வெளி­யி­லி­ருந்து ஆத­ரவு வழங்­கும் என்று ஈ.பி.டி.பி. அறி­வித்­தி­ருந்­தது.
யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்ட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரி­யுள்ள நிலை­யில், தாமும் ஆட்சி அமைக்க உரிமை கோரு­வோம் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும் அறி­வித்­துள்­ளது.
ஈ.பி.டி.பி. யாருக்கு ஆத­ரவு வழங்­கும் என்­பது தொடர்­பில் அந்­தக் கட்­சி­யின் செய­ல­ரி­டம் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு கூறி­னார். “யாருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்­பது தொடர்­பில் இன்­ன­மும் முடி­வெ­டுக்­க­வில்லை. எமது கட்சி கூடி ஆராய்ந்தே இது தொடர்­பில் இறு­தித் தீர்­மா­னத்­துக்கு வரும்”- என்று அவர் கூறி­னார்.
SHARE

Author: verified_user