Wednesday, February 14, 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை திட்டம்; வடகிழக்கில் கூட்டு ஆட்சி

SHARE

புதிய குரல் கொழும்பு செய்தி அலுவலகம்

உள்ளாட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


நாடளாவிய ரீதியில் போட்டியிட்ட 19 மாவட்டங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 185 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடனும் நடைபெற்று வருவதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொள்கை அளவில் இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும், சமகால அரசியல் நிலவரம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
SHARE

Author: verified_user