Thursday, February 1, 2018

முஸ்லிம்களே எங்களுக்கு பலம்; சின்னங்களை விட எண்ணங்கள் முக்கியம் - கிழக்கில் ரணில்

SHARE

பொத்துவில் பிரதேச சபையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (31) நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அதன் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கலந்துகொண்டனர்.
இதில் உரையாற்றிய பிரதமர் முஸ்லிம் மக்களே எங்களுக்கு பலம், அதுபோல முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எங்களின் நம்பிக்கைகுரிய கட்சி எனவும் குறிப்பிட்டார்.
பல்லாயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்‌ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள ஏ.எல்.எம். நசீர், என பலரும் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 comments: