Wednesday, January 31, 2018

கமல் - ரஜினி போட்டா போட்டி

SHARE


அரசியல் கட்சி துவங்கும் பணியில், நண்பர்கள், கமல் - ரஜினி இருவரிடையே, போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளத்தில் அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்து, அவர்களின் கண்டனத்திற்கு ஆளான கமல், தமிழகத்தில் ஊழலை ஒழிக்க, புதிய கட்சி துவங்கப் போவதாக, நவம்பரில் அறிவித்தார்.



கண்ணாமூச்சி
அதுபோல், 25 ஆண்டுகளாக, அரசியல் பிரவேசம் குறித்து, கண்ணாமூச்சி காட்டி வந்தவர், நடிகர் ரஜினி.இவர், 'தனிக்கட்சி துவங்குவேன்; சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், கட்சி போட்டியிடும்' என, அறிவித்து, அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.


ரஜினி, உடனடியாக மக்கள் மன்றம் ஒன்றை துவக்கினார்; ஒரு மன்றத்திற்கு, ஐந்து லட்சம் உறுப்பினர்களை இலக்காக வைத்து, ரஜினி 


ரசிகர்கள் தீவிர பணியாற்றி வருகின்றனர். ரஜினி யின் அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியில் ஆதரித்தாலும், அதிர்ச்சி அடைந்த கமல், கட்சி துவங்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.


ரஜினியை போலவே, தன் ரசிகர்களை, சென்னைக்கு வரவழைத்து, கமல் சந்தித்து வருகிறார்; மாணவர்களையும் சந்திக்கிறார். மேலும், ரஜினி பாணியில், ஊழல் ஒழிப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.இந்நிலையில், மறைந்த, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் வீட்டில் இருந்து, அரசியல் சுற்றுப் பயணத்தை துவங்கப் போவதாக, கமல் அறிவித்தார்.உடனே, வேலுார் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை அறிவித்து, ரஜினி முந்தினார்.


இந்நிலையில் நேற்று, சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன், கமல் ஆலோசனை நடத்தினார். 'தமிழக சுவர்களில் இடம் பிடித்து, மக்கள் மனதில் இடம் பிடியுங்கள்' என, ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.



சுற்றுப்பயணம்
ரஜினியோ, நெல்லை மாவட்டத்திற்கு தற்காலிக பொறுப்பாளர்களை நேற்று நியமித்து, அதிரடி காட்டியுள்ளார்.கமல், பிப்.,21 முதல், சுற்றுப்பயணத்தை துவங்க, ரஜினி ரசிகர்களோ, பிப்., 26 முதல், மார்ச், 3 வரை, ராமேஸ்வரத்தில், 1,008 திருவிளக்கு பூஜை; ஏர்வாடி தர்காவில் வழிபாடு; பாம்பனில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை என,ஆன்மிக அரசியலில் தீவிரம்

நெல்லை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின், கவுரவ செயலராக, பானுசேகர்; செயலராக, செல்வகுமார்; இணைச் செயலராக, பாலகிருஷ்ணன்; இளைஞர் அணி செயலராக, தாயப்பன்; இணைச் செயலராக, பகவதி ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மீனவர் அணி செயலராக, ஆல்ரின்; விவசாய அணி செயலராக, ஆறுமுகம்; தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலராக, கார்த்திகேயன்; மகளிர் அணி செயலராக, பவானி குமணன் மற்றும் வழக்கறிஞர் அணி செயலராக, ஜாஹிர் உசேன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 
SHARE

Author: verified_user

0 comments: