Wednesday, January 31, 2018

ரவி கருணாநாயக்க கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டும்

SHARE

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்தும் தவிர்ந்து இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்ந்த, ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலக் மாரப்பன தலைமையிலான குழு இவ்வாறு பரிந்துரை செய்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் இதனைக் கூறியுள்ளார்.

அந்த அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, ரவி கருணாநாயக்க கட்சியின் செயற்பாடுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அந்தக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

அதன்படி அவர் கட்சியின் உப தலைவராக எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது என்று அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசிய கட்சி சார்பில் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் மூவரடங்கிய குழுவொன்று கடந்த 17ம் திகதி நிமிக்கப்பட்டிருந்தது.
SHARE

Author: verified_user

0 comments: