Wednesday, January 31, 2018

முன்னாள் போராளிகளை மீள் இணைப்பதில் மையப்புள்ளியாக இருப்பவர்

SHARE

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் ஒரு சுறுசுறுப்பான முன்னாள் அங்கத்தவரும் அந்த அமைப்பைச் சேர்ந்த அவருடைய முன்னாள் சக அங்கத்தவர்கள் பலரும் ஒன்றிணைந்து, பிளவடை
ந்து சிதறிப் பிரிந்து கிடக்கும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்ளை ஒரு வலுவான அமைப்பாக ஒன்றிணைத்து, அவர்களை ஸ்ரீலங்காத் தமிழர்களுக்கு சேவையாற்றுவதற்காக பிரதான நீரோட்ட அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு முன்வந்துள்ளார்கள்.

செபமாலை கண்ணன் என்பவர் எல்.ரீ.ரீ.ஈயின் அனுபவமிக்க ஒரு முன்னாள் போராளி, அவர் அந்த அமைப்பில் ஒரு சிறுவர் போராளியாக இணைந்து கொண்டவர், இறுதியில் அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வு பெற்றவர், தற்சமயம் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ போராளிகளை ஒரே குழுவாக இணைத்து நாட்டிலுள்ள தமிழர்களுக்கு திறமையான சேவையாற்றும் நோக்கத்துடன் பிரதான நீரோட்ட அரசியலுக்குள் கொண்டு வருவதில் ஈடுபட்டுள்ளார்.
கண்ணன் 22 வருடங்களுக்கும் மேலாக எல்.ரீ.ரீ.ஈ அமைப்பில் இருந்துள்ளார் மற்றும் ஆயுத மோதல் முடிவடையும் காலகட்டத்தில் அந்த அமைப்பின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்தார். அவரது இடது கால் ஒரு நிலக்கண்ணி வெடியில் பாதிக்கப்பட்டு முழங்கால் வரையான பகுதி வெட்டி நீக்கப்பட்டு விட்டது. அவர் திருகோணமலையைச் சேர்ந்தவர், ஆனால் தற்சமயம் முல்லைத்தீவில் இருந்தபடி புனர்வாழ்வு பெற்ற முன்னாள் அங்கத்தவர்களை ஒர அரசியல் அமைப்பாக மீள் இணைப்பதற்கு வேலை செய்து வருகிறார்.
தற்போதுள்ள அரசியல் தலைமைகள் தமிழ் இனத்தின் நலன்களுக்கு சேவை செய்வதற்கு 1948 பெப்ரவரியில் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே மிக மோசமான தோல்வியை அடைந்திருப்பதால், கண்ணனின் இலக்கு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ ஆட்கள் அனைவரையும் நாட்டிலுள்ள தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒரு ஜனநாயக அமைப்பில் ஒன்றிணைப்பதே என்று சொல்லப்படுகிறது.
ஏற்கனவே மூன்று எல்.ரீ.ரீ.ஈ குழுக்கள் நாட்டில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது -
1.ஜனநாயகத்துக்கான அறப்போர் இயக்கம் என்பது வேந்தன் தலைமையில் இயங்குகிறது. இந்தக் குழுவினர் தங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் (ஐ.ரி.ஏ.கே) உடன் இணைத்துவிட்டார்கள், மற்றும் இந்தக் குழுவின் அங்கத்தவர்கள் சிலர் வட மாகாணத்தின் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் ஒதுக்கப்பட்ட 33 ஆசனங்களில் வீட்டுச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்கள். இதில் மேலும் அறியப்படுவது இந்தக் குழுவில் அதிகபட்சம் மொத்தமாக 50 போராளிகள் வரை இருக்கலாம் என்றும் அதன் தலைவர் வேந்தன், செயலாளர் கதிர் மற்றும் துளசி ஊடகத் தொடர்பாளராகவும் உள்ளார்கள், மற்றும் இந்தக் குழு தற்சமயம் சத்தமில்லாமல் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தடையற்ற ஒன்றாகிவிட்டது.
2.மற்றொரு குழு இன்பராசா தலைமையிலான புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் குழு என்பதாகும். இப்போது இந்தக் குழவின் தலைவரான இன்பராசா, வி.ஆனந்தசங்கரி தலைமையிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் மூதூரில் உள்ள மூதூர் பிரதேச சபைக்குப் போட்டியிடுகிறார். அந்தக் குழுவின் செயலாளர் லிங்கம் உட்பட ஏனைய அங்கத்தவர்கள் தற்போது கண்ணனுடன் இணைந்து எல்.ரீ.ரீ.ஈ யினரை  தேசிய மற்றும் சர்வதேச அளவில் மறுசீரமைக்க பணியாற்றி வருகிறார்கள்.
3.மேலும் முன்னாள் அங்கத்தவரான கற்பகன் என்கிற சிவகுமார் தலைமையில் தமிழ் தேசிய ஜனநாயக அறப்போராளிகள் குழு என்கிற ஒன்றும் உள்ளது மற்றும் அவரது அங்கத்தவர்கள் கண்ணனது கரங்களைப் பலப்படுத்தி அவருடன் இணைந்து பணியாற்றி அவர்களது அமைப்பின் முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து வலுவானதும் சக்தி வாய்ந்ததுமான ஜனநாயக அமைப்பாக மாற்றுவதற்கு ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.
ஏசியன் ட்ரிபியுன் கண்ணனைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் ஏற்கனவே 2000 க்கும் மேற்பட்ட முன்னாள் அங்கத்தவர்களை வளைத்து விட்டிருப்பதால், பெரும்பான்மையான புனர்வாழ்வு பெற்ற முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை தங்களது அமைப்புத்தான் உள்வாங்கியிருப்பதாக நம்புவதுடன் மற்றும் இந்த நாட்டிலுள்ள தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஜனநாயக சக்தியாக அது திகழ்வதாகக் கருதுகிறார்கள்.
வரும் பெப்ரவரி 18ந் திகதி அவர்களது குழுவின் முதலாவது பொதுக் கூட்டத்தை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார். அந்தக் கூட்டத்தில் அவர்களது அமைப்புக்கு ஒரு பெயர் சூடடுவதற்கு அவர்கள் முடிவு செய்திருப்பதுடன்  தலைவர், பொதுச்செயலாளர் என்பன உட்பட அலுவலர்களைத் தெரிவு செய்யவுள்ளதாகவும் மற்றும் முன்மொழியப்பட்ட புதிய குழுவை ஊக்குவிக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் நிறைவேற்றுக் குழு ஒன்று தேவை எனவும் அவர் சொன்னார்.
அமைப்பின் நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டதும், பின்னர் அமைப்புக்கான விதிகள் மற்றும் விதிமுறைகள், நோக்கங்கள் மற்றும் கண்ணோட்டங்கள் என்பன பிரகடனப்படுத்தப் படுவதுடன் அவர்களது குழுவை தேர்தல் ஆணையத்தில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
தற்சமயம் அவர்களது குழுவை ஒழுங்கமைப்பதைத் தவிர வேறு என்ன செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, அவர்களின் குழு அங்கத்தவர்கள் வரவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஒரு சுயேச்சைக் குழுவாக போட்டியிடுவதாகவும் கண்ணன் சொன்னார். தாங்கள் மூதூர் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளில் கேடயச் சின்னத்தில் போட்டியிடுவதாக அவர் சொன்னார்.
அவர் மேலும் சொன்னது அவர்களது குழு அங்கத்தவர்கள் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் மற்றைய சுயேச்சைக் குழுக்களுடன் இணைந்து ஏனைய உள்ளுராட்சி சபைகளிலும் போட்டியிடுகிறார்கள் என்று.உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் முடிவுகள் இந்த நாட்டிலுள்ள தமிழர்கள் இடையே அவர்களது புகழை உறுதிப்படுத்தும் என அவர் முடித்தார்.
SHARE

Author: verified_user

0 comments: