Wednesday, January 31, 2018

முன்னாள் பாதுகாப்பு செயலாளரை கைது செய்வதா அல்லது இல்லையா

SHARE

பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவின் கொலை மற்றும் பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படும் ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ, தான் கைது செய்யப்படுவதை எப்படித் தவிர்த்தார் என்பதை எங்கள் அரசியல் நிருபர் ஆராய்கிறார்.
எகானமிநெக்ஸ்ட் இனது அரசியல் நிருபர் சொல்வது, ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் கோட்டபாய ஒரு சுதந்திர மனிதராக இருப்பதையே விரும்புகிறார்கள், ஆனால் இரண்டு தலைவர்களும் அந்த உயர் மட்ட கைது தொடர்பில் வேறுபட்ட காரணங்களைக் கொண்டுள்ளார்கள்.
மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் முன்னாள் உயர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒருவரைக் கைது செய்வதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டுத் தடுத்ததாக கடந்த வருடப் பிற்பகுதியில் கொழும்பில் பரவிய வதந்திகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் உறுதிப்படுத்தினார்.
மூத்த பத்திரிகையாளர்களுடன் பேசுகையில், தனது சகோதரர் மகிந்தவின் கீழ், நடப்பின்படி அதிகாரமுள்ள தலைவராக இயங்கிய கோட்டபாயா மீதான வழக்கு விசாரணைகளை தான் ஒருபோதும் தடை செய்யவில்லை என தொடர்ந்து மறுத்துவந்த சிறிசேன முதல்முறையாக தான் கோட்டபாயாவைக் காப்பாற்றியதை ஒப்புக்கொண்டார்.
ஜனாதிபதி சிறிசேனவுக்கு, பிரிந்து கிடக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுள் (ஸ்ரீ.ல.சு.க) கடும்போக்குள்ள சிங்கள பௌத்தர்களை அணி திரட்டுவதற்கும் இறுதியில் கட்சியின் தலைமையைப் பாதுகாப்பதற்கும் கோட்டபாய ராஜபக்ஸ ஒரு பயனுள்ள கூட்டாளியாக இருக்க முடியும்.
ஸ்ரீ.ல.சு.கவின் தலைவராக சிறிசேன பெயரளவில் இருந்தாலும், பெரும்பான்மையான ஸ்ரீ.ல.சு.க பாராளுமன்ற அங்கத்தவர்கள் மற்றும் கட்சியின் உயர் தர வரிசையில் உள்ள அங்கத்தவர்கள் அவரது முன்னோடியான மகிந்தவின் பக்கமே உள்ளார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
எனினும் கோட்டபாயாவுக்கு எதிராக நிலுவையில் உள்ள அளவுக்கதிகமான குற்றவியல் வழக்குகளை பயன்படுத்தி தனக்கு (சிறிசேன) ஆதரவாக கோட்டபாயாவின் கரத்தைத் திருப்பலாம். கோட்டபாயாவின் ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள கடும்போக்காளர்களை வெல்வதற்கு சிறிசேனவுக்கு உதவ முடியும்.
சிங்கள பௌத்த கடும்போக்கு தேசியவாதத்தின் சின்னமாக கோட்டபாயா வெளிப்பட்டுள்ளார் மற்றும்  தீவிரவாத பொது பல சேனாவின் வண. ஞ}னசாரவுடன் அவருக்குள்ள தொடர்பு நன்கு ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.
கோட்டபாயாவுடனான எந்தச் சேர்க்கையும், சிறிசேன இதுவரை காலமும் பெற்று வந்த இரண்டு பிரதான சிறுபான்மைக் குழுக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவுக்கு விலையாகக் கொடுக்க நேரிடலாம், ஆனால் சிறிசேனவுக்கு மிகவும் அழுத்தம் தரும் விடயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியே ஆகும்.
பெப்ரவரி 10 உள்ளுராட்சித் தேர்தல்களில் சந்திக்கவுள்ள படுதோல்வி, கோட்டபாயா மற்றும் இதர ராஜபக்ஸ பிரிவு கடும்போக்குவாதிகளுடன் சிறிசேன ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான ஒரு அதீத விருப்பத்தை அவருக்கு ஏற்படுத்தும். அநேகமாக அதுதான்; ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தனக்குப் பின்னால் நிற்பார்களானால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறவைத் துண்டித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கத் தான் தயார் என்று அவர் கடந்த வாரம் அறிவித்ததுக்கான காரணமாகவும் இருக்கலாம்.
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் கோட்டபாயா ராஜபக்ஸவை உடனடியாகக் கைது செய்வதில் தான் தலையிட்டதை நியாயப்படுத்தும் விதமாக, சட்டமா அதிபரினால் தயாரிக்கப்பட்ட வழக்கு உறுதியானதாக உள்ளதா என்பதை ஆராயாமல் தான் எந்த நடவடிக்கையையும் எடுக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட வழக்கின் கோப்பின்மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை தெளிவு படுத்திவிட்டார் மற்றும் கோட்டபாயா ராஜபக்ஸமீது குற்றஞ்சாட்டுவதற்கு முன்பு அந்த வழக்கு கோப்பினை மூத்த தனியார் சட்ட நிபுணர்கள் மறு பரிசீலனை செய்யவேண்டும் என விரும்பினார்.
இயந்திரத்தின் கைத் தடுப்புக்கருவியை சிறிசேன இரண்டு கரங்களாலும் இழுத்துப் பிடித்துள்ள நிலையில், கோட்டபாயா கடந்த மாதம் நாட்டை விட்டுச் சென்றுள்ளார் மற்றும் அவரது சகோதரரின் உள்ளுராட்சித் தேர்தல்கள் பிரச்சாரத்தில் முக்கியமாகக் கலந்து கொள்ளாமலும் இருக்கிறார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு கூட, கோட்டபாயா ராஜபக்ஸவை கைது செய்யாமல் விடுவது அவரது நீண்ட பயணத்தில் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.
2020ல் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான நம்பிக்கையில் உள்ளார். அவருக்குப் போட்டியாக உள்ள பிரதான எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்படும் எந்தப் பிளவும் விக்கிரமசிங்காவுக்கு மட்டுமே உதவும். ஸ்ரீ.ல.சு.க வில் ஒரு பிளவை நிலைநிறுத்துவதற்கு கோட்டபாயா ராஜபக்ஸ காரணி விக்கிரமசிங்காவுக்கும் மற்றும் ஐதேக வுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
கோட்டபாயா ராஜபக்ஸ ஒரு பிரிவினை ஏற்படுத்தும் நபராக உள்ளார். நிமால் சிறிபால டீ சில்வா, ஜோண் செனவிரத்ன மற்றும் வேறு பல மூத்த உறப்பினர்கள் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரபலங்கள் பலர், கட்சியில் தங்கள் நிலைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் குழி பறித்துவிடுவார் என நம்புகிறார்கள்.
கோட்டபாயாவுக்கு ஆதரவு தரும் குழுவினர் ஐதேகவினைக் காட்டிலும் ஸ்ரீ.ல.சு.கவின் மைத்திரிபால பிரிவினையே இலக்கு வைக்கிறார்கள். ஸ்ரீ.ல.சு.க வின் பிளவு 2020 வரை செல்வதை தக்க வைக்கவேண்டிய விக்கிரமசிங்காவின் சவாலுக்கு கோட்டபாயா ராஜபக்ஸ அந்த மூலோபாயத்துக்கான ஒரு முக்கிய காரணியாக இருப்பார் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்ள பிளவை ஆளமாக்குவதற்கு அவர் சுதந்திரமானவராக விடப்படவும் வேண்டும்
விக்கிரமசிங்காவின் அமைச்சரவையில் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரட்னாயக்கா கோட்டபாயாவுடன் ஒரு வசதியான உறவினைக் கொண்டுள்ளார் என்றும் மற்றும் அதனால் கோட்டபாயா கைது செய்யப்படாமல் தவிர்க்கப் படுவதற்கு அவரும் உதவியுள்ளார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கோட்டபாயா மீதான வழக்கு விசாரணையின் முன்னேற்றம் மிகவும் மெதுவாக உள்ளதுக்காக அமைச்சர் ரட்னாயக்காவை பகிரங்கமாகவே விமர்சித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர் ரட்னாயக்காவின் சகோதரர் காவன் ரட்னாயக்காவும் கூட கோட்டபாயா ராஜபக்ஸவின் ஒரு நெருங்கிய நண்பர் என அறியப்படுகிறது.
கோட்டபாயாவும் கூட, காலஞ்சென்ற தனது பெற்றோருக்கு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர்மீது தொடரப்பட்ட வழக்கில் காவல்துறையினர் அவரைக் கைது செய்வதைத் தடுப்பதற்காக மேல்முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ளார்.
எனினும் காவல்துறை புலனாய்வாளர்கள் தெரிவித்தது, அரசியல் இடையூறுகள் இல்லாவிட்டால் மேலும் பல தீவிரமான குற்றங்களுக்காக கோட்டபாயா ராஜபக்ஸவை கைது செய்வதை எதுவும் தடுக்கமுடியாது என்று.
SHARE

Author: verified_user

0 comments: